

சுபாங் ஜெயா, ஏப். 1- இன்று காலை 10.35 மணி நிலவரப்படி இங்குள்ள ஜாலான் புத்ரா ஹர்மோனி புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 25 பேருக்கு முதலுதவி வழங்கப்பட்டது. பலர் தீக்காயம், காயம் மற்றும் மூச்சுத்திணறலுக்கு முதலுதவி பெறுவது பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஐவர் தொடர் சிகிச்சைக்காக செர்டாங்மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
இந்த தீவிபத்து தொடர்பில் இன்று காலை 8.10 மணியளவில் தகவலைப்பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
இந்த சம்பவத்தில் சில வீடுகளிலும் தீவிபத்து ஏற்பட்டதாக அவர் சொன்னார்.
bernama

