
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சூரிய மகள் 2025’ என்ற தலைப்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் கரு.பழனியப்பன் கலந்து கொண்டார். அவர் பேசியாதவது:-
நிகழ்ச்சியில் பேசிய இரண்டு அமைச்சர்களும் அரசியல் பற்றி பேசாமல், இந்த ஆட்சியின் சாதனைகளை பற்றி பேசினார்கள். முதலமைச்சரின் திட்டங்களை பற்றி பேசினார்கள். அது தான் மனிதனுக்கு கிடைக்கின்ற மிக சிறந்த பாராட்டு என்று நினைகின்றேன்.
திமுக ஆட்சியில் நூலகம் கட்டினார்கள். முதலில் சென்னை நூலகத்திற்கு அண்ணாவின் பெயர், மதுரையில் நூலகம் கட்டி கலைஞர் பெயர், கோவை நூலகத்திற்கு பெரியார் பெயர் வைத்துள்ளனர்.

