


பூச்சோங் ஏப் 3-
பூச்சோங் புத்ரா ஹைட்ஸ்சில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அண்ட்ரூ டேவிட் தலைமையில் ம இகா பணிப்படை இன்று களத்தில் இறங்கியது.
தீ விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் சிலாங்கூர் MIC உடன் இணைந்து MIC பிரிகேட் தற்காலிக இடமாற்ற மையத்தில் (PPS) உள்ளது என்று அண்ட்ரூ டேவிட் தெரிவித்தார்.
நமது சகோதரர்கள் ஹரி ராயாவை கொண்டாடும் இந்த நேரத்தில் நிகழ்ந்த சம்பவத்தால் சுற்றுச்சூழலும், வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் முகங்களைப் பார்க்கும் போது மிகவும் வேதனையை தந்தது.
இந்தச் சம்பவத்தை நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க முன்வந்த நண்பர்களுக்கும் நன்றி. இந்த ஒற்றுமை மலேசிய மக்களின் வலிமையின் அடையாளம் என்று அவர் சொன்னார்.
இந்த மாதிரியான பேரிடரில் இருந்து நாம் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கொண்டிருக்கும் Dato DR. Joe Saravanan (Pengerusi Bulan Sabit Merah Malaysia – Daerah Klang)) மற்றும் அவரது குழுவினருக்கும் நன்றி என்று அவர் சொன்னார்.

