
சுபாங்ஜெயா: ஏப் 3-
எரிவாயு குழாய் தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்ட
புத்ரா ஹைட்ஸ் பாதுகாப்பான இடம் என்பதை குடியிருப்பாளர்களுக்கு உறுதி செய்யப்பட வேண்டும் என்று
கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடிப்பைத் தொடர்ந்து 111 பேர் காயமடைந்து நூற்றுக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இதனால் மிகப் பெரிய பேரழிவை தந்துள்ள புத்ரா ஹைட்ஸ் பாதுகாப்பானது என்பதை குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் உறுதியளிக்க வேண்டும் என்றார் அவர்.
இந்த சம்பவம் குறித்த தற்போதைய விசாரணை முழுமையானதாக இருக்க வேண்டும்.
எரிவாயு குழாய்களுக்கு அருகில் கட்டப்பட்ட குடியிருப்புப் பகுதிகளின் பாதுகாப்பை மறு மதிப்பீடு செய்வதும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.

