உலுலங்காட் கெஅடிலான் தொகுதி தேர்தல்! தலைவர் பதவிக்கு ஹானாபி போட்டியிடுகிறார்

காஜாங், ஏப்ரல் 9-
நாடு தழுவிய அளவில் கெஅடிலான் கட்சியின் தொகுதி தேர்தல் சூடு பிடித்ததுள்ள வேளையில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள உலு லங்காட் தொகுதி தேர்தலில் இரு அணிகள் களத்தில் இறங்கி உள்ளது.

நடப்பு தலைவர் இராஜன் முனுசாமி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர் ஓர் அணியை அமைத்து போட்டியிடுகிறார்.

அதேசமயம் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முகமட் ஹானாபி ஒர் அணியை அமைத்துள்ளார்.

இவரின் அணியில் துணை தலைவர் பதவிக்கு முரளி சின்னையா உதவித் தலைவர் பதவிக்கு காடபியும் போட்டியிடுகிறார்கள்.

மகளிர் அணி தலைவி பதவிக்கு கோகிலவாணியும் இளைஞர் அணி தலைவர் பதவிக்கு முகமட் அஸிமுடின் போட்டியிடுகிறார்கள்.

உலு லங்காட் தொகுதி இளைஞர் அணி உதவித் தலைவர் பதவிக்கு லெவின்ராஜ் போட்டியிடுகிறார்.

வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஆன்லைன் வழியாக உலுலங்காட் கெஅடிலான் தொகுதி உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.

இம்முறை 3,400 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles