புத்ரா ஹைய்ட்ஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கைப்பேசி சேவைக் கட்டண விலக்கு

பூச்சோங், ஏப்ரல் 10 – பூச்சோங், புத்ரா ஹைய்ட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறிப்பிட்ட காலத்திற்கு கைப்பேசி சேவைக் கட்டண விலக்கு அளிக்கப்படும்.

முன் கட்டண (prepaid) மற்றும் பின் கட்டண (postpaid) சேவைகளை அது உள்ளடக்கியிருப்பதாக, தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் கூறினார்.

இந்த இக்கட்டான சூழலில் அவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், நாட்டின் முதன்மை நிறுவனங்களான Celcom Digi, Maxis, TM Unifi, U Mobile, Yes ஆகியவை அச்சலுகையை வழங்குகின்றன.

இன்று நடத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் அவர் அதனை அறிவித்தார்.

கட்டண விலக்கு தவிர, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சிம் அட்டைகளை இலவசமாக மாற்றித் தருதல், புத்ரா ஹைய்ட்ஸ் தற்காலிக நிவாரண மையத்தில் இலவச 5G இணையச் சேவை உள்ளிட்ட உதவிகளையும் அந்நிறுவனங்கள் வழங்க முன் வந்துள்ளன.

நிறுவனங்களுக்கு நிறுவனங்கள் உதவிகள் மாறுபடலாம்; அவ்வப்போது சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றில் மாற்றம் செய்யப்படலாம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles