
தஞ்சோங் ரம்புத்தான் ஏப். 11
இன்று நாட்டின் பிரதமாக பதிவு வகித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியிட்ட தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய வாக்காளர்கள் வழங்கிய மகத்தான ஆதரவை அவர் ஒருபோதும் மறக்கமாட்டார் என்று தம்புன் நாடாளுமன்றத் தொகுதிற்கான சிறப்பு அதிகாரி டத்தோ ஆர். சுரேஷ்குமார் கூறினார்.
இந்தியர்கள் வழங்கி ஆதரவுக்கு நன்றி கடனாக தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியர்களின் தேவைகளை அறிந்து உரிய உதவிகள் செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 180 ஆண்டு கால பழமை வாய்ந்த பேரா , தம்புன் 6 ஆவது மைலில் எழுந்தருளியுள்ள கண்ணனூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலும் பங்குனி உத்திர திரு விழா சிறப்பு வருகை புரிந்தப் பின்னர்.ஆலயத்தில் ஆற்றிய உரையில் டத்தோ சுரேஷ குமார் இவ்வாறு பேசினார்
இவ்விழாவை முன்னிட்டு இம்மாதம் 2 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று இன்று ஆலயத்தின் வருடாந்திர திருவிழாவான பங்குனி உத்திர விழா நடைபெற்றது.
காலை மணி 9 மணிக்கு அரசு மர பிள்ளையார் சந்நிதியில் இருந்து பக்தர்கள் பால் குடம் ஏந்தி அம்மாளுக்கு செலுத்தினர்.
பின்னர் நடைபெற்ற கும்ப பூஜைக்குப் பின்னர் கடம் புறப்பாடும் பின்னர் ஆலயங்களில் உள்ள திருமூர்த்திகளுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலயம் 180 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று அந்த ஆலத்திற்கு அரசாங்கம் நிரந்தர நிலம் வழங்கி சிறப்புடன் செயல் பட்டு வருகிறது.
இந்த ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் கடந்த 2021 ஆம் நடைபெற்றதாக ஆலயத் தலைவர் ராமசாமி சுப்பிரமணியம் கூறினார்.
இந்த விழாவில் பெரும் திரளான பொது மக்கள் கலந்துக்கொண்டனர். அதன் அன்னதான செலவுகளை தஞ்சோங் ரம்புத்தானைச் சேர்ந்த கோவிந்தசாமி குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். ஆலயம் வளரச்சிக்கு பொது மக்கள் ஆதரவு வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

