
திருப்பத்தூர் , ஏப்ரல் 11-
இன்று பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள முருகப் பெருமான் கோவில்களில் பங்குனி உத்திரம் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
அதேசமயம் இன்று தமிழ் நாட்டில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்த ஶ்ரீ பூமாயி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா சிவாச்சாரியார்கள் முன்னிலையிலும் சிவ ஶ்ரீ பிச்சை குருக்கள் தலைமையிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை அருள் மாமணி ஆறுமுகம் பிள்ளையின் புதல்வர் ஆறு தங்கவேலு பிள்ளை,ஆறு தங்க நாச்சியார் மற்றும் திருப்பத்தூர் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
இந்த விழாவில் அருள் மாமணி ஆறுமுகம் பிள்ளையின் பேரன்கள் டத்தோ நா. வசந்தராசன் நா. ரமேஷ்வரன், நா. சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூரில் உள்ள கோவில்கள் சார்பாக ஶ்ரீ பூமாயி அம்மனுக்கு சீர் கொண்டு வரப்பட்டது .
இந்த விழாவில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் கொடி அசைத்து கும்பாபிஷேக நிகழ்வைத் தொடங்கி வைத்தார்
சிவகங்கை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பாரதி லோட்டஸ் குடும்பங்களின் சார்பாக காரைக்குடி சண்முகம் மற்றும் திருப்பத்தூர் ஊர் பொதுமக்கள் சுற்றி உள்ள கிராமத்து பொது மக்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு ஶ்ரீ பூமாயி அம்மனின் ஆசி பெற்றனர்

