
ஈப்போ, ஏப்ரல் 12-
தாப்பா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.
தேசிய முன்னணி சார்பில் டாக்டர் யுஸ்ரி போட்டியிடுகிறார்.
இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி அமோக வெற்றி பெற பிபிபி கட்சி தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.

இன்று நடைபெற்ற வேப்புமனு தாக்கலின் போது தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் பிபிபி தலைவர்கள் அணி திரண்டனர்.
பேராக் மாநில பிபிபி தலைவர் டத்தோ லீ ஹெங், பிபிபி கட்சியின் செயலாளர் டத்தோ இண்டர்ஜிட் சிங், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா, தகவல் தொடர்பு துறை துணை தலைவர் குமார், சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன், பிபிபி கட்சியின் உச்சமன்ற உறுப்பினர்கள் நந்தா, கதிர், கெடா மாநில தலைவர் மாணிக்கவாசகம் ஆகியோரும் இன்று கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாலான் பெசார் ஆயர் கூனிங்கில் பிபிபி கட்சியின் சார்பில் தேர்தல் நடவடிக்கை அறை திறக்கப்பட்டுள்ளது.
டத்தோ டாக்டர் லோகபாலா இன்று மதியம் இந்த தேர்தல் நடவடிக்கை அறையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.