
காளிதாஸ் சுப்ரமணியம்
உலுசிலாங்கூர் ஏப்,13-
நாடு தழுவிய அளவில் கெஅடிலான் கட்சியின் தேர்தல் அனல் பறக்க நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சிலாங்கூர் மாநில தொகுதி ரீதியில் நேற்று இணைய வழி நடைபெற்ற கெஅடிலான் உலு சிலாங்கூர் தொகுதியில் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் மீண்டும் வெற்றியை தன் வசமாக்கினார்.
கடந்த 2022 ஆம் ஆண்டுநடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று உலுசிலாங்கூர் கெஅடிலான் தொகுதித் தலைவரானார்.
அதனை தொடர்ந்து 2ஆவது முறையாக உலுசிலாங்கூர் கெ அடிலான் தொகுதி தலைவர் பதவியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார் டாக்டர் சத்ய பிரகாஷ்.
இம்முறை மும்முனை போட்டி நிலவிய போதிலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜூன் லியோ, கலைச்செல்வன் ஆகிய இருவரையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் டாக்டர் சத்ய பிரகாஷ் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் அவர்களுக்கு 3,016 வாக்குகள் கிடைத்தது.
எதிர்த்து போட்டியிட்ட ஜூன் லியோ 993 வாக்குகளும் கலைச்செல்வனுக்கு 609 வாக்குகளும் கிடைத்தன.
டாக்டர் சத்திய பிரகாஷ் அணியாக போட்டியிட்ட சிலாங்கூர் மாநில மந்திரி புசார் சிறப்பு அதிகாரி சைபுடீன் சஃபி துணைத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.
அவரை தொடர்ந்து முகமட் அலி உதவித் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.
உலு சிலாங்கூர் தொகுதி தேர்தலில் டாக்டர் சத்யா பிரகாஷ் – சைபுடின் அணி அனைத்து பதவிகளையும் கைப்பற்றியது.