
காளிதாஸ் சுப்ரமணியம்
ரவாங், ஏப்ரல் 13-
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற செலாயாங் தொகுதி கெஅடிலான் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய்க் கியாட் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி அடைந்தார்.
இவருக்கு 1,648 வாக்குகள் கிடைத்தது. எதிர்த்து போட்டியிட்ட கமாரூடின் 2,041 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
செலாயாங் தொகுதி கெஅடிலான் இளைஞர் அணி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தமிழரசு தமிழ் கலை 348 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தினேஷ் செல்வராஜ் 314 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
கெஅடிலான் கட்சியின் அடிமட்ட தொண்டராக விளங்கி வரும் டைகர் தமிழ் கலை புதல்வர் தமிழரசு என்பது குறிப்பிடத்தக்கது.