
தாப்பா ஏப்ரல் 15-
தாப்பா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பிஎஸ்எம் கட்சியின் சார்பில் போட்டியிடும் பவானி தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கி உள்ளார்.
தேசிய முன்னணி மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்கள் மத்தியில் பவானி தனது பிஎஸ்எம் கட்சியின் உறுப்பினர்களுடன் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார்.

பிஎஸ்எம் கட்சியின் தலைவர் டாக்டர் ஜெயகுமார், துணை தலைவர் அருட் செல்வம் மற்றும் உரிமை கட்சியின் தலைவர் டாக்டர் இராமசாமி ஆகியோரும் பவானிக்கு அதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.