நெகிரி செம்பிலான் மாநிலத்தில்இந்து கோவில்கள் எதிர் நோக்கி உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண மாண்புமிகு வீரப்பன் தலைமையில் கூட்டம்!

சிரம்பான், ஏப்ரல் 15-
கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி சிரம்பான், மாவார் மருத்துவமனையின் அரங்கத்தில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத்தின் இந்து ஆலயங்களின் சந்திப்பு கூட்டம் மிக சிறப்பாக நடந்தேறியது.

இந்நிகழ்ச்சியினை மாநில அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு திரு வீரப்பன் சுப்ரமணியம் மற்றும் பிரதமரின் சிறப்பு பிரிவுக்கான சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் வழிநடத்தினார்.

மலேசிய இந்து சங்கம் நெகிரி செம்பிலான் மாநிலப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் தங்க கணேசன் மற்றும் மாநில இந்து சங்க தலைவர் DR ஆனந்த் கோபி கலந்துக் கொண்டு பல முக்கியமான கருத்துக்களை தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில் சுமார் 96 ஆலய பிரதிநிதிகள் கலந்துகொண்டு பல பிரச்சனைகளை முன்வைத்தார்கள்.

நிகழ்ச்சிக்கு மாநில ஆள்பல இலாக்கா, மாநில குடிநுழைவு துறை மற்றும் மாநில திவால் துறை கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்

தற்போது ஆலயலங்களில் நிலவி வரும் நில பிரச்சினை, பதிவு ரத்து, திவால் மற்றும் இதர பிரச்சனைகளுக்கு மாண்புமிகு வீரப்பன் நேரில் கேட்டு அறிந்து அதற்கு ஒரு நல்ல தீர்வை மாநில இந்து சங்கத்துடன் கலந்து பேசி வழங்குவதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பு கூட்டம் பல முக்கியமான தீர்மானங்களுடன் நிறைவடைந்தது.

இந்த கூட்டத்தில் நெகிரி மாநிலத்தின் பல்வேறு இந்து ஆலயங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, ஆலய நிர்வாகம், சமூக சேவைகள் மற்றும் மதச்சார்பற்ற ஒற்றுமை போன்ற முக்கிய அம்சங்களைப் பற்றி விவாதித்தனர்.

இந்த கூட்டம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் இந்து சமுதாயத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கியமான படியாக கருதப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles