நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெருநடை வீரர் சரவணனுக்கு பிரதமர் உதவிக் கரம்!

புத்ரா ஜெயா, ஏப்ரல் 19-
கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 50 கிலோமீட்டர் பெருநடை போட்டியில் மலேசியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்து சாதனை படைத்தவர் பெருநடை வீரர் ஜி.சரவணன்.

ஜாகர்த்தா மற்றும் மலேசிய சீ போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றவர்.

பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த சரவணன் இப்போது நரம்பு தசை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மலேசியாவின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மொக்தார் டஹாரியும் இதே நோயினால் பாதிக்கப்பட்டார்.

பெருநடை வீரர் சரவணன் நோயினால் பாதிக்கப்பட்ட விவகாரம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவனத்திற்கு வந்தது.

பிரதமரின் அரசியல் செயலாளர் போர்ஹான் மற்றும் இளைஞர் விளையாட்டு துறை துணை அமைச்சர் அடாம் அடில் நேற்று நேரடியாக சரவணனை சந்தித்து நலம் விசாரித்தனர்.

மேலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சார்பில் உதவிக்கரம் நீட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles