
தீபாவளியை ஒட்டி வீடுகளில் நடக்கும் துப்புரவு பணிகளின் போது பழைய மரச்சாமான்கள், மின்சாதனப் பொருட்கள் என்று மொத்த கழிவுகளை அகற்ற வசதியாக மொத்தம் 30 தொட்டிகள் தயார் நிலையில் உள்ளன.
உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 3 டன் எடையுள்ள தொட்டிகள் பத்தாங் காலி, புக்கிட் பெருந்தோங், புக்கிட் செந்தோசா, கோலா குபு பாரு மற்றும் பல பகுதிகளில் இருப்பதாக அறிவித்துள்ளது.
“காண்ட்ராக்டர்கள் எளிதாக வீட்டு கழிவுகளை சேகரித்து சுற்றுப்புறத்தை சுத்தமாகவும் வசதியாகவும் வைத்திருக்கும் வகையில் வழங்கப்படும் ரோரோ தொட்டிகளில் மொத்த கழிவுகளை வீசுவதன் மூலம் குடியிருப்பாளர்கள் ஒத்துழைப்பார்கள் என்று உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் நம்புகிறது.