
வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை அமைத்தால் அரசு நிர்வாகம் ஜசெக கட்டுப்பாட்டில் இருக்கும் என்று உளறி இருக்கும் ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் முதலில் அவர் கட்சி பிரச்சனைகள் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக மித்ரா நிதி மோசடி மற்றும் penjana kerjaya நிதி மோசடியிலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். உங்கள் கட்சியில் சில அரசு சாரா இயக்க தலைவர்கள் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறார்கள் என்பது நாடறியும்.
தேசிய முன்னணி ஆட்சியில் பல அரசியல் தலைவர்கள் 1MDB ஊழல் குற்றச்சாட்டில், சம்பந்தப் பட்டிருக்கிறார்கள். அதற்கான எடுத்துக்காட்டு முன்னாள் பிரதமர் இன்று சிறையில் தள்ளப்பட்டுள்ளார் என்பதனை மலேசியர்கள் அறிவார்கள் .
28 நாள் விசாரணை இன்றி ஒருவரை தடுத்து வைக்கும் சொஸ்மா சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நீங்கள், கைதாகிய இளைஞர்களுக்கு இலவச சட்ட வழக்கறிஞர்களை நியமித்து இருக்கின்றோம் விடுதலை வாங்கித் தருகிறோம் என்று கூறிக்கொண்டு
மக்களிடம் குறிப்பாக இந்திய சமுதாயத்தை வைத்து அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது உங்கள் கட்சி.
வரும் 15வது பொதுத் தேர்தலில் மக்கள் ம இகாவுக்கு மரண அடி கொடுப்பார்கள் என்று, மலேசிய வேலன் படை தேசிய தலைவர் சுரேந்தர் பலராமன், பத்தாய் ரெமிஸ் ஜசெக தலைவர் ஆறுமுகம், பகாங் மாநில PKR AMK துணைத் தலைவர் ராகவன், கோலா சிலாங்கூர் கெஅடிலான் தொகுதி தலைவர் தீபன் சுப்ரமணியம்,
தஞ்சோங் மாலிம் ஜசெக தலைவர் மோகன் ராமசாமி , தாமான் பந்தாய் வாங் கிளை தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் தெரிவித்தனர்.