லோட்டஸ் குழுமத்தின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது!

பெட்டாலிங் ஜெயா, ஏப் 23-
லோட்டஸ் குழுமத்தின் ஏற்பாட்டில் இன்று பெட்டாலிங் ஜெயா ஜாலான் காசிங் லோட்டஸ் அலுவலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .

மலேசிய மார்பக புற்றுநோய் சமூக நல இயக்கம் மற்றும் மலேசிய தேசிய புற்றுநோய் சமூக நல இயக்கம் உதவியோடு இந்த இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

காலை 9.00 மணிக்கு தொடக்கம் மாலை 4.00 மணிவரை நடைபெற்ற இந்த இலவச மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு இலவசமாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர்.

பெண்களுக்கான மார்பக புற்றுநோய் தொடர்பாக பல பெண்கள் சிகிச்சையும் விளக்கமும்
பெற்றனர்.

பலர் இரத்ததானம் செய்த வேளையில் இரத்த அழுத்தம் குறித்தும் சிகிச்சை பெற்றனர்.

லோட்டஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ ரெனா நாக சுந்தரம் மற்றும் லோட்டஸ் பணியாளர்கள் ரத்ததானம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

லோட்டஸ் குழுமத்தின் நிர்வாகம் இயக்குநர் இந்திரா காந்தி இந்த நிகழ்வை சிறப்பாக நடத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles