
தீபாவளியைக் கொண்டாடவிருக்கும் இந்துக்களின் வசதிக்காக பத்து கேவ்ஸ் தொகுதியில் மாநில அரசின் மலிவு விற்பனை நடைபெறவுள்ளது.
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாமான் லக்ஸ்மணா பெர்மாயில் இம்மாதம் 22 ஆம் தேதி இந்த மலிவு விற்பனையை நடத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக தொகுதிக்கான மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் அப்துல் ரஹிம் கஸ்டி கூறினார்.
இந்த விற்பனையில் வழக்கமான அத்தியாவசியப் பொருள்களோடு ஆட்டிறைச்சியும் நியாயமான விலையில் விற்கப்படும்
சந்தையை விட குறைந்த விலையில் விற்கப்படும் இப்பொருள்களுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவு பிரமிப்பூட்டும் வகையில் உள்ளதாக அவர் சொன்னார்