டிஜிட்டல் நிர்வாக நடைமுறையில் பினாங்கில் எட்டு இந்து கோவில்கள்!!!

பிறை ஏப்ரல் 27-
பினாங்கு மாநிலத்தில் உள்ள எட்டு இந்து கோவில்கள் டிஜிட்டல் நிர்வாக நடைமுறையில் பதிவு செய்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

தொழில்நுட்ப வளர்ச்சியில் மலேசிய இந்து கோவில்கள் ஆர்வம் கொண்டுள்ளது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகஅவர் சொன்னார்.

பினாங்கு மாநில எட்டு கோவில்கள் டிஜிட்டல் நிர்வாக நடைமுறையில் இயங்குவதை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேற்றிரவு பட்டவெர்த் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கோவில்கள் டிஜிட்டல் நிர்வாக நடைமுறையில் இயங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் இயங்கும் 12 கோவில்களும் இந்த இலக்கவியல் நடைமுறையைப் பயன்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

தற்போது முதல் கட்டமாக பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தானம், ஸ்ரீ ஐயப்பசாமி கோவில், ஸ்ரீ கணேசர் கோவில்,
தண்ணீர்மலை ஸ்ரீ நகரத்தார் கோவில், குவீன் ஸ்திரிட் மாரியம்மன் கோவில், பட்டவெர்த் ஸ்ரீ மகாஷமாரியம்மன் கோவில், ஜோர்ஜ்டவுன் ஸ்ரீ ராமர் கோவில் மற்றும்
பினாங்கு ஸ்ரீ குன் பிகாரி கோவில் டிஜிட்டல் நிர்வாக நடைமுறையில் இயங்கும்.

இதுவரை இல்லாத அளவில் அதிகமான கோவில்கள் டிஜிட்டல் நிர்வாக நடைமுறையைப் பயன்படுத்த ஆர்வத்துடன் முன்வந்துள்ளது பெரும் உற்சாகத்தை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles