
பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று அகில இந்திய வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களோடு கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில், இன்றைய கலந்துரையாடலின்போது பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பற்றி பேசினார்.
“ஜம்மு காஷ்மீரில் நீண்ட நாட்களுக்கு பிறகு அமைதி திரும்பியது. மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால் ஜம்மு காஷ்மீர் அமைதியாக இருப்பதை பயங்கரவாதிகள் விரும்பவில்லை. சகஜ நிலைக்கு காஷ்மீர் திரும்புவதை விரும்பாத பயங்கரவாதிகள் பஹல்காமில் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் காஷ்மீர் அமைதியாக இருக்க விரும்பவில்லை என்பதையும், காஷ்மீரை அழிக்க நினைப்பதையும் காட்டுகிறது.

