
மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் தமிழ்ப் பேரவையும் ஏற்று நடத்தும் பல நிகழ்ச்சிகளுக்கு ஓம்ஸ் அறவாரியம் தனது ஆதரவை வழங்கி வருகிறது.
இந்நிலையில், நாட்டில் உள்ள இதர பல்கலைக்கழகங்களில் செயல்படும் இந்திய மாணவர்களுக்கான அமைப்புகளுக்கும் உதவிகளை நல்க ஓம்ஸ் அறவாரியம் தயாராக உள்ளதாக அதன் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.
”முடிந்தளவிற்கு எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் உதவிகள் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.
உதவி என்றால், எங்களை நாடினாலே போதும். உதவிக் கரம் நீட்ட நாங்கள் தயார் என்று அவர் உறுதியளித்தார்.
சமூதாயம் மற்றும் மாணவர்கள் சார்ந்த எந்தவொரு நிகழ்ச்சியையோ திட்டத்தையோ நடைமுறைப்படுத்த முயற்சித்து வரும் பல்கலைக்கழக இந்திய மாணவர்கள் தங்களின் உதவியை நாடலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

