
கெடா மாநிலத்தில் இன்று முதல் அனைத்து சூதாட்ட நடவடிக்கைகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.
சூதாட்ட லைசென்ஸ் புதுப்பிக்கப்படாது என்று கெடா மாநில அரசு எடுத்த முடிவை தொடர்ந்து சூதாட்ட மையங்கள் இனியும் கெடா மாநிலத்தில் செயல்படாது.
கெடா மாநில அரசாங்கம் எடுத்துள்ள முடிவை மத்திய அரசாங்கமும் கடைபிடிக்க வேண்டும் என பாஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

