ஆட்சி அமைக்க அழைக்கும்படி ஆளுநருக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்

சென்னை மே 5-
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது.

திமுக கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றது. அதேசமயம் அதிமுக 53 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்த தேர்தல் முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் ஏற்படுள்ளது.

இந்த நிலையில், தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் வேண்டும் என தமிழக வெற்றிக்கழகத் தலைவர் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு த.வெ.க. தலைவர் விஜய் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பிய நிலையில் ஆளுநர் அவசரமாக இன்று சென்னை செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை திரும்பும் ஆளுநர் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles