
சென்னை மே 6-
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை பெற்று தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் நாளை ஏழாம் தேதி பதவியேற்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகம் தந்த வெற்றிக் களிப்பில் இருக்கும் தவெக கட்சியின் தலைவர் விஜய் இன்று காலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாகவும் தொடர்ந்து நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பதவி ஏற்பு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மே 7 அன்று விஜய் பதவியேற்பு பற்றி தற்போது சில ஊகங்கள் மட்டும் எழுந்துள்ள நிலையில் இந்த விஷயம் சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது

