சாம்பியன்ஸ் லீக் கிண்ண போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு அர்செனல் தேர்வு

லண்டன் மே 6-
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்தின் அர்செனல் கிளப் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளது.

இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்று அரையிறுதி ஆட்டத்தில் அர்செனல் 1-0 என்ற கோல் கணக்கில் அட்லெட்டிகோ மெட்ரிட் கிளப்பை வீழ்த்தியது.

அர்செனல் கிளப்பின் ஒரே கோலை 44 ஆவது நிமிடத்தில் சாக்கா அடித்தார் .

முன்னதாக நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இரு கிளப்புகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.

இரண்டு ஆட்டங்கள் முடிவில் அர்செனல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles