
சிலாங்கூர் இந்தியர் விளையாட்டு பேரவையின் ஏற்பாட்டில் ஷா ஆலம் எமரால்ட் தமிழ்ப்பள்ளி திடலில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையிலான வலைப்பந்து போட்டி நடைபெற்றது.
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் இந்த போட்டிக்கு தனது ஆதரவை வழங்கினார்.
இந்த போட்டியில் மொத்தம் 27 தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கிள்ளான் ஹைக்கோம் தமிழ்ப் பள்ளி முதல் நிலையில் வெற்றி பெற்ற வேளையில் உலு சிலாங்கூர் மாவட்டத்தைப் பிரதிநிதித்த பத்தாங் காலி தமிழ்ப் பள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
கிள்ளான் பத்து அம்பாட் தமிழ்ப் பள்ளி 3 ஆவது இடத்தை பிடித்தது.
இதனிடையே இந்த போட்டியில் பத்தாங்காலி தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சிலாங்கூர் மாநில ரீதியில் இரண்டாவது இடத்தை வென்று பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர்.
இவ்வேளையில் ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.