

கோலாலம்பூர் ஏப்ரல் 30-
இன்று அட்சயத் திருதியை முன்னிட்டு மஸ்ஜித் இந்தியாவில் உள்ள கன்னிகா தங்க மாளிகையில் நகைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினார்.
அட்சயத் திருதியை என்பது அதிக அதிஷ்டம் தரும் நாளாக கருதப்படுகிறது.
‘அட்சயம்’ என்ற சொல்லின் பொருள் ‘குறையாது’ அல்லது ‘அழியாது’ என்பதாகும்.
இந்த நாளில் புதிய தொடக்கங்களை செய்வது, தானம் செய்வது, மற்றும் தங்கம் போன்ற விலைமதிப்புள்ள பொருட்களை வாங்குவது ஆகியவை நல்ல அதிஷ்டத்தை தரும் என்று கன்னிகா தங்க மாளிகை மற்றும் லால் கோல்ட் நகைக் கடை உரிமையாளர் டத்தோ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று ஏப்ரல் 30ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை அக்சயத் திருதி நடப்பில் இருக்கும். இந்த நேரத்தில் தங்கத்தை வாங்கி சேர்ப்பது பாரம்பரியமாக உள்ளது. இந்த நல்ல நேரத்தில் தங்கம் வாங்கினால் அது பல மடங்கு உயரம் தரும் என்பது ஐதீகமாகும் என்று அவர் சொன்னார்.
இதனிடையே கன்னிகா தங்க மாளிகைக்கு ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் வருகை தந்து தமது ஆதரவை தெரிவித்து கொண்டார்.

