மே 1 தொழிலாளர் நாளில் மக்கள் தொண்டன் உயர்திரு வி. டேவிட் ( V . David) அவர்களை நினைவு கூறுவோம்!

மே 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உழைக்கும் வர்க்கத்தை போற்றும் விதமாக தொழிலாளர் நாள் அனுசரிக்கப்பட்டு பொது விடுமுறை வழங்கி கொண்டாடப்படுகிறது.

ஒரு சமுகத்தின் முதுகெலும்பாகவும் , ஒரு தேசத்தை கட்டி எழுபுவதிலும் தொழிலாளர்களின் கடின உழைப்பு இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

18 – ஆம் நூற்றாண்டில் தொழில் வளர்ச்சி வேகமெடுத்து பல நாடுகள் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்த கால கட்டத்தில் தொழிலாளர்கள் 12 மணி நேர மேல் கட்டாயம் வேலை செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். அதனை தொடர்ந்து உலகில் பல்வேறு நாடுகளில் போராட்டம் வெடித்தது. அதன் பிறகு 1889 உலக தொழிலாளர்களின் சர்வதேச கூட்டம் நடைபெற்றது.

இதில் தொழிளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரமாக மாற்ற வேண்டும் மற்றும் மே 1ஐ உலக தொழிலாளர் நாளாக கொண்டா வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அந்த போராட்டத்தின் விளைவாக
மே 1 தேதி முதல் உலகளாவிய தொழிலாளர் தினத்தை கொண்டாட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து பல நாடுகளில் தொழிலாளர் நாள் கொண்டாடப்பட்டு வந்த நிலையில்
மே 1 நாள் மலேசியாவிலும் தொழிலாளர் நாள் அறிவிக்கப்பட்டு அதற்கு பொது விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியவர் மக்கள் தொண்டன் என்று அனைவராலும் அழைக்கபடும் மருத்துவர் வி .டேவிட் (V. David) அவர்கள்.

அது மட்டுமல்ல, மலேசிய தொழிலாளர்களின் உரிமைக்காக தனது இறுதி மூச்சுவரை போராடிய ஓர் உன்னத போராளி.

மலேசியா மண்ணில் உழைக்கும் மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் மட்டுமின்றி இனம்,மொழி மேம்பாட்டிற்காகவும் போராடி பல முறை சிறைவாசம் அனுபவித்தவர்.

இவரின் தியாகம் பெரும்பாலும் இன்றைய தலைமுறைக்கு தெரியாது. அவர் பயணித்த கட்சிகள் கூட அவரை நினைவு கூறுகிறார்களா என்பது கேள்வக்குறியே.

உயர்திரு டேவிட் அவர்களின் தியாகதிக்கு மலேசிய மண்ணில் அவருக்கென்று ஒரு அடையாளம் கூட இல்லை என்பது மிகவும் வருந்ததக்கது.

இன்றைய ஒற்றுமை அரசாங்கம் வி டேவிட் தியாகத்தை போற்றும் விதமாக அவரின் பெயரை ஒரு சாலைக்கு சூட்டப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மலேசிய இந்தியர்களுக்காகவும் இந்திய  சமூகத்திற்காகவும் தமிழ்மொழிக்காகவும் தொழிலாளர் உரிமைக்காகவும் தன் வாழ்நாளின் இறுதிவரையில் சமரசம் செய்து கொள்ளாத ஒரு உண்மையான போராளியை நாம் மறக்க கூடாது.

மலேசிய மண்ணில் தனியொரு வரலாற்றை ஏற்படுத்திய மக்கள் போராளி உயர்திரு வி.டேவிட் அவரை நினைவுக்கூறுவதில் நாம் பெருமிதம் கொள்வோம்.

கணேசன்
உரிமை
பகாங் மாநிலம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles