
மலேசியத் தமிழ் எழுத்துலகில்ன் தனக்கான தனித்துவ ஆளுமையை கொண்டிருந்ததோடு நவீன இலக்கியச் சிந்தனைச் சிற்பி எனவும் போற்றப்படும் எழுத்தாளர், கவிஞர் கோ.முனியாண்டியின் நினைவாக கோமு புதுக்கவிதைப் போட்டியை பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இப்போட்டி இச்சங்கத்தின் புரவலர் தமிழ்நெஞ்சர் வழக்கறிஞர் ம.மதியழகனின் ஆதரவோடு நடைபெறுகிறது.
இம்மண்ணில் நீண்ட இலக்கிய வரலாற்றையும் கவிதைகளையும்,சிறுகதைகள்,நாவல்கள் என பல்வேறு பொக்கிசங்களை நமக்காக விட்டுச் சென்ற கவிஞர் கோ.முனியாண்டியின் நினைவாக நடத்தப்படும் இப்புதுக்கவிதைப் போட்டியில் மலேசியர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இக்கவிதைப் போட்டிக்கான முதல் பரிசு வெ.1500,இரண்டாம் பரிசு வெ.1000,மூன்றாம் பரிசு வெ.700 வழங்கப்படுவதோடு 4 முதல் 10 வரையில் தேர்வாகும் கவிதைகளுக்கு ஆறுதல் பரிசாக வெ.100 தலா ஒருவருக்கு வழங்கப்படும்.
பரிசு பெறும் கவிதைக்குரிய கவிஞர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் பரிசளிப்பு விழாவில் ரொக்கப்பரிசோடு கேடயம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இப்புதுக்கவித்தைப் போட்டி தொடர்பில் மேல் விபரம் அறிய 016-5684302இல் சங்கத்தின் துணைத்தலைவர் சிவாலெனின் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

