பத்து டூவா ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத்தைநடப்பு நிர்வாக அங்கத்தினர்களிடம் ஒப்படையுங்கள்.150க்கும் உட்பட்டோர் விண்ணப்பம்.

சுங்கைபட்டாணி, மே 2-

இங்குள்ள பத்து டூவா ஶ்ரீ மகா மாரியம் ஆலயப் பிரச்சனையினை பதிவு இலாகா ரத்து செய்ததை தொடர்ந்து முன்னாள் நடப்பு நிர்வாக அங்கத்தினர்களாகிய தாமான் சொங்கேட் பொதுமக்கள் அந்த ஆலயப் பொறுப்பினை தங்களிடம் ஒப்படைக்க கோரி பதவி பிரமாணம் அதிகாரி முன்னிலையில் கையெழுத்து இட்டு பதவி இலாகவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அண்ணாதுரை தலைமையில் இங்குள்ள இராமர் ஆலயத்தில் தாமான் சொங்கேட்டைச் சேர்ந்த 150க்கும் உட்பட்டவர்கள் திரண்டனர்.

பத்து டூவா ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் அங்கத்தினர்கள் பெரும்பாலும் தமான் சொங்கேட்டை சேர்ந்தவர்கள் என அண்ணாதுரை தெரிவித்தார்.

நடப்பு நிர்வாகத்தின்போது இருந்த 70 உறுப்பினர்களும் மேலும் தாமான் சொங்கேட்டைச் சேர்ந்த 80 உறுப்பினர்களும் பதவி பிரமாணம் அதிகாரியின் மூலம் கையெழுத்து இட்டனர்.

பத்து டூவா ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் பதிவை 31.12.2024 திகதி முதல் ரத்துச் செய்வதாக கெடா மாநில சங்கப் பதிவு இலாகா அறிக்கை கடிதம் ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த ஆலயத்தின் பதிவு இன்று வரை ரத்தாகியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles