
பெருவாஸ், மே.6: மஞ்சோங் மாவட்ட அளவில் நடைபெற்ற போலிங் போட்டியில், 12 வயது உட்பட்ட பெண்கள் பிரிவில் மாணவி தபாஸ்வினி நாகராஜன் 2-ஆம் நிலையை அடைந்து பெருவாஸ் தமிழ்ப்பள்ளிக்கு மேலும் ஒரு சாதனை விருதைப் பெற்றுத் தந்துள்ளார்.
இவர் மொத்தம் 551 புள்ளிகள் பெற்று, மிக சிறுபான்மைப் புள்ளி வித்தியாசத்தில் ஹான்னா பத்ரிஷாவிடம் தோல்வி கண்டார். இருப்பினும், ஆசிரியர் நாகராஜாவின் தொடர்ச்சியாக ஒரு மாத கால கடுமையான பயிற்சிக்குப்பின் கிடைத்த மாபெறும் வெற்றி என இம்மாணவித் தெரிவித்தார்.
இவ்வெற்றியானது பள்ளிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளதாக இப்பள்ளித் தலைமயாசிரியர் குணசீலன் மனோகரன் தெரிவித்தார். இணைப்பாட பொருப்பாசிரியர் பௌத்ரன் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் தொடர்ந்து வரும் போட்டிகளில் வெற்றி சிகரத்தைத் தொடுவோம் என மேலும் தெரிவித்தார்.