இளம் பெண் பாலியல் பலாத்காரம்!
போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

விசாரணையின் போது 16 வயதுடைய இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார் என்று போலீஸ் படை தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சனி தெரிவித்தார்.

கெடா அலோர் ஸ்டாரில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் அந்த இன்ஸ்பெக்டருக்கு எதிராக டிசம்பர் 31 ஆம் தேதி சம்பந்தப்பட்ட பெண் புகார் செய்தார்.

தனது வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் போலீசில் புகார் செய்தார்.

இந்த புகார் தொடர்பாக அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தியுள்ளார்.

விசாரணைக்காக மர்ம பகுதியை பரிசோதிக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் உத்தரவுக்கு இணங்க அந்த பெண் ஆடையை கழற்றியிருக்கிறார்.

அந்த சமயத்தில் தாம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles