உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலராக பத்திரிகையாளர் ப.புவனேஸ்வரன் பதவி ஏற்றார்

உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலராக இன்று மொத்தம் 22 பேர் பதவி ஏற்றுக் கொண்டனர். இதில் ஏழு இந்தியர்களும் அடங்குவர்.

பிரபல பத்திரிகையாளர் மற்றும் கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த ப. புவனேஸ்வரன் இன்று கவுன்சிலராக பதவி ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவர் ஆவார்

தமிழ்ப் பத்திரிகை துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் புவனேஸ்வரன் இப்போது தீவிர அரசியலில் முத்திரை பதித்துள்ளார்.

உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி கெஅடிலான் தலைவர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜனுடன் இணைந்து தொகுதி மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles