
நாட்டில் உள்ள 528 தமிழ்ப் பள்ளிகளில் பல பள்ளிகள் குறைந்த மாணவர்களை கொண்டிருக்கும் பட்சத்தில் இந்த பள்ளிகளை காப்பாற்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் முன் வர வேண்டும் என்று அருண் துரைசாமி கேட்டுக் கொண்டார்.
குறைந்த மாணவர்களை கொண்டிருக்கும் தமிழ்ப் பள்ளிகள் தோட்டப் புறங்களில் உள்ளது.
இந்த பள்ளிகளின் உரிமத்தை கொண்டு நகரங்களில் இந்தியர்கள் அதிகமாக வாழும் இடங்களில் புதிய தமிழ்ப் பள்ளிகள் கட்டப்பட வேண்டும்.
இதற்காக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு நிதியை ஒதுக்கி தமிழ்ப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டும் என்று தமிழ்ப் பள்ளிகளை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள் குழுவைச் சேர்ந்த அருண் துரைசாமி கேட்டுக் கொண்டார்.

