

காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக ஐந்து இந்தியர்கள் நேற்று நகராண்மைக் கழக தலைவர் Tuan Haji Najmuddin bin Jemain முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
ஜசெக கட்சியை சேர்ந்த மூத்த அரசியல்வாதி தியாகராஜா ராஜகோபால் மீண்டும் கவுன்சிலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜசெக கட்சியை சேர்ந்த சங்கீதா சந்திரமோகன், கெஅடிலான் கட்சி சார்பில் இராமச்சந்திரன் அர்ஜூனன், பாங்கி கெஅடிலான் தொகுதி தலைவர் பாலமுரளி கோவிந்தராஜூ மற்றும் உலு லங்காட் கெஅடிலான் தொகுதி உதவித் தலைவர் சந்திரன் இராமசாமி ஆகியோரும் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டவர்களில் அடங்குவர்.
இம்முறை மொத்தம் 24 பேர் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக பதவி ஏற்றுள்ளனர்.
பதவி ஏற்பு சடங்கு நிகழ்ச்சியில் உலுவங்காட் கெஅடிலான் தொகுதி தலைவர் இராஜன் முனுசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர் விஷ்ணு ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்

