
புக்கிட் ஹாலில் தேசிய அரங்கில் நடைபெற்ற ஆசியான் கிண்ணக் கால்பந்து போட்டியில் ஹரிமாவ் மலேசியா குழு 4-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
மலேசியாவின் முதல் கோலை 35 ஆவது நிமிடத்தில் டேரன் லுக் அடித்தார். பின்னர் 51,54 ஆவது நிமிடத்தில் மேலும் இரு கோல்களை ஸ்டிவெர்ட் அடித்தார்.
4 ஆவது கோலை 88 ஆவது நிமிடத்தில் செர்ஜியோ அகோரோ போட்டார்.
கடுமையான போராட்டத்திற்கு பிறகு சிங்கப்பூர் 85 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தது.
அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற ஹரிமாவ் மலேசியா வரும் ஜனவரி 7 ஆம் தேதி புக்கிட் ஹாலில் அரங்கில் தாய்லாந்தை சந்திக்கிறது.
பின்னர் ஜனவரி 10 ஆம் தேதி பேங்காக் அரங்கில் மீண்டும் தாய்லாந்தை சந்திக்கிறது.
இரண்டு அரையிறுதி ஆட்டத்தில் அதிக கோல் கணக்கில் வெற்றி பெறும் குழு இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

