பெனால்டி கிக் போட்டியில் டி.பி.போய்ஸ் குழு கிண்ணத்தை வாகை சூடியது

செமினி ரிஞ்சிங்
வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்காக இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது என்று பெமூடா ரின்சிங் ரேஞ்சர்ஸ் தலைவர், பரமேஸ்வரன் முனுசாமி தெரிவித்தார்.

இப்போட்டி சிறப்பாக நடைபெறதினேஷ் மற்றும் கலைச்செல்வன் சிறப்பாகச் செயல்பட்டனர்.

தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பி.சகாதேவன், கெஅடிலான் உலு லாங்காட் தொகுதி தலைவர் ராஜன் முனுசாமி ஆகியோரின் ஆதரவில் இப்போட்டி நடத்தப்பட்டது.

டி.பி.போய்ஸ் குழு சாம்பியன் கிண்ணத்தையும் 500 ரொக்கத்தைத் தட்டிச் சென்றது.

ஆறு எப்.சி. குழு 2 ஆவது இடத்தையும் பெமுடா ரிஞ்சிங் ரேஞ்சர்ஸ் 3 ஆவது இடத்தையும் ஒன் பிரதர்ஸ் குழு 4 ஆவது இடத்தையும் பிடித்தன.

டி.ஆர்.எப்.சி. கால்பந்து சங்கத் தலைவர், கர்ணாதுரை அமாவாசை, மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ரவி முனியாண்டி ஆகியோர் பரிசுகளை எடுத்து வழங்கினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles