
சிங்கை, மே 9-
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் சிங்கப்பூர் விக்டோரியா பிளாசாவில் இன்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தமிழ்ப் புத்தக திருவிழா மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
சிங்கப்பூர் சட்ட- உள்துறை அமைச்சர் கா.சண்முகம் இன்று சிறப்பு வருகை தந்து தமிழ்ப் புத்தக திருவிழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
மலேசிய திருநாட்டில் மிகவும் புகழ்பெற்ற குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் புத்தகங்கள் இந்த புத்தக திருவிழாவில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள், நாவல்கள், வரலாற்று நாயகர்களின் படைப்புகள், தமிழ் அகராதி உட்பட திருக்குறள் போன்றவை இங்கு விற்பனையில் உள்ளன.
குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் அவர்கள் சிரமம் பாராமல் மலேசியாவில் இருந்து புத்தகங்களை சிங்கைக்கு அனுப்பி வைத்து சிங்கை தமிழ் மக்களும் தமிழ் புத்தகங்களை வாங்க ஏற்பாடு செய்துள்ளார்.
குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் அவர்களின் புதல்வி பார்கவி திருக்குறள் புத்தகத்தை அமைச்சர் சண்முகத்திடம் வழங்கியபோது அவர் உற்சாகத்துடன் பெற்றுக் கொண்டார்.
டத்தோ டாக்டர் கு செல்வராஜ் அவர்களின் தமிழ் சேவைக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். சிங்கப்பூர் எழுத்தாளர் நா.ஆண்டியப்பன் ஏற்பாட்டில் இந்த புத்தகத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.