பண்டார் ஸ்ப்ரிங்ஹில் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலுக்கு மண்டபம் அமைக்க நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன் உதவிக் கரம்!

சிரம்பான், மே 9-
நெகிரி செம்பிலான் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினரும் ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு வீரப்பன் சுப்ரமணியம் அவர்கள் பண்டார் ஸ்ப்ரிங்ஹில் கோவிலுக்கு வருகை அளித்தார்.

அவருடன் நெகிரி மாநில இந்து சங்க தலைவர், டாக்டர் ஏ.எல். ஆனந்த் கோபி மற்றும் மாநில இந்து சங்க செயலாளர் உமாசுதன் பெருமாள் ஆகியோரும் வருகை அளித்தனர்.

பண்டார் ஸ்ப்ரிங்ஹில் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயதிற்கு சென்று அவர்களின் மண்டபம் அமைக்கும் திட்டத்தை கேட்டு அறிந்தார்கள். ஆலயம் மிகவும் நேர்த்தியாக நடப்பு நிர்வாகம் வழிநடத்தி வருகின்றனர்.

மாண்புமிகு அவர்களை சந்தித்த கோவில் நிர்வாகத்தினர் கோவிலுக்கு ஒரு மண்டபம் தேவை என்பதை கூறினார்கள்.

ஆலயத்திற்கு ஒரு மண்டபம் இருந்தால் சுற்று வட்டார மக்கள் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொன்னார்கள்.

அனைத்தும் கேட்ட மாண்புமிகு வீரப்பன் அவர்கள் மண்டபம் அமைக்க அனைத்து உதவி செய்வதாக கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles