பெட்டாலிங் ஜெயா ம இகா தொகுதி ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் விமரிசையாக நடைபெற்றது!

கிளானா ஜெயா, மே 10-
பெட்டாலிங் ஜெயா ம இகா தொகுதி ஏற்பாட்டில் இன்று இலவச மருத்துவ முகாம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

பெட்டாலிங் ஜெயா தொகுதி தலைவர் டத்தோ எஸ்.எம். முத்து தலைமையில் நடைபெற்ற இந்த இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பி40 எனப்படும் வசதி குறைந்த மக்கள் பயன் பெறும் வகையில் இலவச கண் மருத்துவ முகாம் அனைவருக்கும் பெரும் நன்மையை அளித்தது.

இது தவிர்த்து மக்கள் தங்களது உடல் நலம் குறித்து மருத்துவ ஆலோசனையும் பெற்றனர்.

மக்கள் எப்போதும் தங்கள் உடல் நல ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று டத்தோ எஸ் எஸ்.எம்.முத்து கேட்டுக் கொண்டார்.

பெட்டாலிங் ஜெயா தொகுதி மக்கள் நன்மை பயக்கும் வகையில் இந்த இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles