


கோலாலம்பூர் மே 10-
நம் நமக்காக பிரார்த்தனை செய்வதை விட மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். அப்போதுதான் மற்றவர்களும் நம் நல்ல இருக்க பிரார்த்தனை செய்வார்கள் என்று பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்கியராஜ் தெரிவித்தார்.
மலேசிய திருநாட்டில் மிகவும் புகழ்பெற்ற பிரிக்பீல்ட்ஸ் கிருஷ்ணர் ஆலயத்தில் நடைபெற்ற குரு பெயர்ச்சி விழாவில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு கே.பாக்கியராஜ் உரையாற்றினார்.
நகைக்சுவை கருத்துகளுக்கு மிகவும் பெயர் போன நடிகர் பாக்யராஜ் உரையை கேட்க பொதுமக்களும் சுவாரசியமாக கேட்டு ரசித்தனர்.
நோய் வாய்ப்பட்டிருக்கும் நமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் குணம் அடைய பிரார்த்தனை செய்தல் அது பெரும் பாக்கியம். நாம் மற்றவர்காக பிரார்த்தனை செய்தால் நமக்காக பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் இருப்பார்கள் என்றார்.
பிரிக்பீல்ட்ஸ் கிருஷ்ணர் ஆலயத்தின் தலைவர் டத்தோ தங்கப் பெருமாள் உட்பட ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்கள் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த விழாவில் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்ட கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் வாரிய உறுப்பினர் டாக்டர் முனியப்பா, பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா தலைவர் ஸ்டார் மணியம் உட்பட பலருக்கும் இயக்குனர் பாக்யராஜ் மற்றும் நடிகர் வையாபுரி சிறப்பு செய்தனர்.
தமிழ் நாட்டில் பிரபல ஜோதிடர் கார்த்திகேயன் இந்த நிகழ்வில் ஆற்றிய உரை அனைவரையும் பெரிதும் கவர்ந்தது.