
கோலாலம்பூர் மே 11-
உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் மே 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை “அன்னையர் தினம்” கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று மே 11 மலேசிய உட்பட அனைத்து நாடுகளிலும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
அன்பின் முழு உருவமாய்த் திகழ்ந்து, குழந்தைகளுக்காவும் குடும்பத்திற்காகவும் தம் வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு அன்னையர் தினத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் என்று சிலாங்கூர் மாநில பிபிபி தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.