
கோலாலம்பூர் மே 11-
மே 11 ஆம் தேதி உலகம் முழுவதும் அன்னையர் தினம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுருவம் அம்மா என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் மீண்டும் அன்னையர் தின நாள் வாழ்த்துகள்! ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்! என்று அவர் கூறினார்