

கிள்ளான், மே 13-
போர்ட் கிள்ளானில் நடைபெற்ற சித்திர பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் சார்பில் 3,000 பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் குளிர்பானங்களும் வழங்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் சிறப்பு வருகை தந்து இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

பிபிபி கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் நந்தா, கோலலங்காட் பிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் ரவி, கோத்தா ராஜா பிபிபி கட்சியின் தொகுதி தலைவர் டாக்டர் விஜேய், மூர்த்தி ஆகியோருக்கு டாக்டர் சுரேந்திரன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
வீரா காளிமுனி இயக்கத்துடன் இணைந்து சிலாங்கூர் மாநில பிபிபி கட்சி 3,000 பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் குளிர்பானங்களும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.