
ஊழல் குற்றம், அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டு தொடர்பில் நாளை பினாங்கு மாநில முன்னாள் இரண்டாவது துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று அவரின் வழக்கறிஞர் கூறினார்.
பினாங்கு பட்டர்வெர்த்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் 76 வயதான பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி நாளை குற்றஞ்சாட்டப்படவுள்ளார். 2009 எம்.ஏ.சி.சி சட்டத்தின் செக்ஷன் 23(1) டாக்டர் இராமசாமி மீது குற்றஞ்சாட்டப்படுகிறது
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக எம்.ஏ.சி.சி எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், தனக்கு எதிரான எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி மறுத்தார்.