
கிள்ளான், மே 14- கோலக் கிள்ளான், லிம்போங்கானில் அமைந்துள்ள ஸ்ரீ பால சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற சித்ரா பௌர்ணமி விழாவில் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கலந்து கொண்டார்.
இந்த விழாவில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதி ராவ், பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் தக் சீ, கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி, கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.