
பிரதமரும் கெஅடிலான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வாரின் உத்தரவுக்கு இணங்க ரபிசியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
கட்சியி துணைத் தலைவர் ரபிசி ரம்லி எனக்கு எதிராக பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.இந்த விவகாரத்தில் நான் அமைதியாக இருக்க முடிவு எடுத்துள்ளேன்.
உட்கட்சி தாக்குதல்களைத் தடை செய்யும் கட்சியின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு இம்முடிவை எடுத்துள்ளேன்.மேலும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கட்சி உறுப்பினர்களாகிய ஒருவரையொருவர் தாக்கக் கூடாது என்று ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளார்.
எனவே, அந்தக் கேள்விக்கும் குற்றச்சாட்டுக்கும் என்னால் பதிலளிக்க முடியாது.மேலும் மற்றொரு கட்சி உறுப்பினரைத் தாக்கியதற்காக நான் குற்றம் சாட்டப்படலாம் என டத்தோஸ்ரீ ரமணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

