

செராண்டா, மே 14
உகாதி புத்தாண்டை முன்னிட்டு மலேசிய தெலுங்கு சங்கத்தின் சார்பில் உகாதி பெருநாள் கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ரவாங் செராண்டாவில் உள்ள மலேசிய தெலுங்கு அகாடமியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி மற்றும் மலேசியாவுக்கான இந்தியாவின் துணை தூதர் சுபாஷிணி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மலேசிய தெலுங்கு சங்கத்தின் தலைவர் பிரதாப் மற்றும் துணை தலைவர் சத்யா சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மலேசிய தெலுங்கு அகாடமி மாணவர்களின் ஆறு மணி நேர இன்னிசை கலாச்சார படைப்புகள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.
தெலுங்கு சமூகத்தினரிடையே பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன அதைத் தொடர்ந்து SPM 2024 தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.
புத்தாண்டை அறிமுகப்படுத்தியதோடு, விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்களிடையே அரவணைப்பையும் தோழமையையும் பகிர்ந்து கொண்ட ஒரு அற்புதமான மாலைப் பொழுதாக இது அமைந்தது.

