நம்மை பத்து மாதம் சுமந்து பெற்று வளர்ந்து ஆளாக்கிய அன்னையர்களின் தியாகங்களை போற்றுவோம் – டத்தோஸ்ரீ தனேந்திரன்

பட்டர்வொர்த், மே 14-
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் அன்னையர் தினம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் மலேசிய திருநாட்டில் அன்னையின் தியாகங்களை போற்றும் வகையில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

அன்னையர்களின் தியாகங்கள் விலை மதிப்பற்றது. போற்றி பாராட்டப்பட வேண்டும் என்று
பினாங்கு பட்டர்வொர்த் நகரில் நடைபெற்ற அன்னையர் தின விழாவில்
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் தெரிவித்தார்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 2025 அன்னையர் தின கொண்டாட்டம் பட்டர்வொர்த்தில் உள்ள கிராவ்ன் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது.

நாடு முழுவதிலுமிருந்து 500க்கும் மேற்பட்டோரை இந்த நிகழ்வு ஒன்றிணைத்தது டத்தோஸ்ரீ தனேந்திரன், டத்தின்ஸ்ரீ வேனி தனேந்திரன் தலைமையில் இம்மாபெரும் விழா நடைபெற்றது.

பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு, செனட்டர் லிங்கேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர் குமரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களான அன்னை பாய் ஷி யின், பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவின் முக்கிய அங்மாக ஐந்து தாய்மார்களின் தியாகம், அர்ப்பணிப்பு, அவர்களின் குடும்பங்கள், சமூகங்களில் அசாதாரண பங்களிப்பிற்காக சிறப்பு செய்யப்பட்டனர்.

இந்தக் கொண்டாட்டம் தாய்மார்களின் தியாகங்களைப் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் கட்சி உறுப்பினர்களிடையே நட்புறவை வலுப்படுத்துகிற து என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles