பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு உதவும்! சிவனேசன்

தெலுக் இந்தானில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த ஐந்து கலக தடுப்பு படை வீரர்கள் இன்னும் கவலைக் கிடமான நிலையில் இருப்பதாக ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ. சிவனேசன் கூறுகிறார்.

தெலுக் இந்தான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) நான்கு பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒருவர் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் ICU வார்டில் இருப்பதாகவும் பேராக் சுகாதாரக் குழுத் தலைவருமான அவர் தெரிவித்தார்.

மேலும் மூன்று கலக தடுப்பு படை வீரர்கள் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிவநேசன் மேலும் கூறினார்.

மூன்று பேர் ஆபத்தில் இல்லை, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்,” என்று இங்குள்ள லஹாட்டில் மறைந்த எஸ். பெருமாளின் குடும்பத்தினருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் இறைவனை பிரார்த்திப்பதாக கூறினார்

நேற்று முன்தனம் காலை 8.50 மணிக்கு நடந்த விபத்தில் கொல்லப்பட்ட ஒன்பது கலக தடுப்பு படை வீரர்களில். ஒருவரின் 44 வயதான சார்ஜன் பெருமாளும் ஒருவரானார்.

தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி விழாவில் கடைமைகளை முடித்துவிட்டு ஈப்போ சுங்கை செனமில் உள்ள FRU யூனிட் 5 தளத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அவர்கள் பயணித்த வாகனம் சரளைக் கற்கள் நிறைந்த லாரியில் மோதியது .

8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மேலும் ஒருவர் தெலுக் இந்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மரணம் அடைந்துள்ளார்

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, குறிப்பாக அவர்களின் குழந்தைகளுக்கு உதவுவதற்கான வழிகளையும் அரசு விவாதிப்பதாக சிவநேசன் கூறினார்.

லாரி விபத்தில் கொல்லப்பட்ட 9 கலக தடுப்பு படை வீரர் காவல்துறை முழு சடங்குகளுடன் கௌரவித்தது

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவிக்கொள்வதாக கூறிய அவர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்,.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles